உலகில் மிகப்பெரும் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் பட்டியல் : பாகிஸ்தான் 5-வது இடத்தில் இருப்பதாக தகவல்
Sep 6 2018 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகில் மிகப்பெரும் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் பட்டியலில், பாகிஸ்தான் 5-வது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் நாடு தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வைத்துள்ளதாகவும், இது 2025-ம் ஆண்டுக்குள் 220 முதல் 250 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2020-ம் ஆண்டுக்குள் 60 முதல் 80 அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க நிறுவனம், அணு ஆயுதங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் அந்நாடு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது.