இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த அனைத்து உதவிகளையும் செய்ய தயார் : சீனா தகவல்

Aug 23 2018 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என சீனா தெரிவித்துள்ளது.

தீவிரவாத தாக்குதலால் முடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் இம்ரான் கான் இடையே நேர்மறையான கருத்துக்கள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் உறவுகளை எளிமையாக்குதில் ஆக்கப்பூர்வமான பங்கை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம் என சீனா கூறியுள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படுவது பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவு தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டது தொடர்பான செய்தியை பார்த்ததாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஒரு பொதுவான அண்டை நாடாக சீனா, இருதரப்பு உறவை மேம்படுத்த உதவிகளை செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இருதரப்பு விவகாரத்தில் மூன்றாவது நபர் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என இந்தியா கூறியுள்ளது என்பது குறிப்பிட்டுள்ளது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00