மீண்டும் ஏவுகணைகளை தயாரிக்கும் வடகொரியா : பொருளாதார தடைகள் தொடரும் - அமெரிக்கா எச்சரிக்கை

Jul 31 2018 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

எச்சரிக்கையையும் மீறி மீண்டும் புதிய ஏவுகணைகளை வடகொரியா தயாரித்து வருவதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐ.நா, வடகொரியா மீது கடும் பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது. பதட்டத்தை தணிக்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கும் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை முற்றிலும் அழிப்பதாக வடகொரியா உறுதியளித்தது.

இந்தநிலையில் வட கொரியா மீது உளவு செயற்கைகோளை பறக்க விட்ட அமெரிக்‍கா, அதன் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இதன்மூலம் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்‍கா தெரிவித்துள்ளது.

எனவே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்படும்வரை, வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00