சீனாவில் அமெரிக்க தூதரகம் அருகே பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு : மக்கள் அதிர்ச்சி - தற்கொலைப்படை தாக்குதல் முயற்சியா? என விசாரணை

Jul 26 2018 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனத் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே, இன்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்கொலைப்படை தாக்குதல் முயற்சியா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்காக பொதுமக்கள் வரிசையில் நிற்கும் இடத்திற்கு அருகே, பலத்த சத்தத்துடன் இன்று காலை குண்டு வெடித்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகை, அப்பகுதியை சூழ்ந்தது. இசம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து சென்று, குண்டு வெடித்த பகுதியைச் சுற்றி கயிற்று வேலி அமைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்ட நிலையில் பெண் ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான Global Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து, அமெரிக்க தூதரகம் கருத்து சொல்ல மறுத்துவிட்டது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு சீனாவிலிருந்து கணிசமானோர், அமெரிக்காவுக்குச் சென்று வருவதை, இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பாதிக்குமோ? என சீன மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00