கொரியப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஏவுகணை மையங்களை அழிக்கும் பணியில் வடகொரியா அரசு : அது தொடர்பான புகைப்படங்களையும் வெயிட்டது

Jul 25 2018 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரியப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தங்களது நாட்டில் உள்ள ஏவுகணை மையங்களை அழிக்கும் பணியில் வடகொரியா அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர் பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் தணிந்தது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, வடகொரிய அதிபர் முன்வந்ததையடுத்து, ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. இதில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் முன் ஜே இன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 65 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரிய போரை முடிவுக்கு கொண்டு வரவும், கொரிய தீபகற்பத்தினை அணு ஆயுதமற்ற பிரதேசம் ஆக்கவும் உறுதி எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், கொரியப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அணு ஆயுதங்கள் தயாரிப்பு மையங்களை அழிக்கும் நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் அந்நாட்டு அரசு வெளியிட்டது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00