பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் கைது - கலவரத்தைத் தடுக்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு - லாகூரில் இணையதள சேவை முடக்‍கம்

Jul 14 2018 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

பனாமா முறைகேடு விவகாரம் தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகள் மரியத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நவாஸ் ஷெரீப்பிற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, லண்டனில் இருந்து அபுதாபி வழியாக பாகிஸ்தானின் லாகூருக்கு விமானம் மூலம் இருவரும் வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும், லாகூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்டனர். லாகூர் விமான நிலையத்துக்கு வெளியே, நவாஸ் ஷெரிப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அதனையடுத்து, கலவரத்தைத் தடுக்கும் வகையில் லாகூர் முழுவதும் இணையதள வசதி துண்டிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக லாகூர் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00