தாய்லாந்தில் குகையில் சிக்கிய மேலும் 5 பேர் பத்திரமாக மீட்பு : சாகசம் நிகழ்த்திய தாய்லாந்து மீட்புக் குழுவினர் - மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

Jul 11 2018 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் நீச்சல் குழுவினரின் மிகக்‍ கடுமையான போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 13 பேருக்‍கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் மிக நீண்ட சுரங்கம் அமைந்துள்ளது. கடந்த மாதம் 23ம்தேதி இந்த சுரங்கத்தின் சிறிய துவாரம் வழியே ஜுனியர் கால்பந்து வீரர்கள் 12 பேரும், அவர்களது பயிற்சியாளரும் சுரங்கத்திற்குள் சென்றனர். அப்போது பெய்த கனமழையால் சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் அவர்கள் அனைவரும் சுரங்கத்திற்குள் சிக்‍கித் தவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கு ராணுவமும் கடற்படையும் ஈடுபட்டுத்தப்பட்டன. முதல் கட்டமாக 4 சிறுவர்களும், அதைத் தொடர்ந்து மேலும் 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். இதையடுத்து எஞ்சிய 5 பேரை மீட்கும்பணி துரித கதியில் நடைபெற்று வந்தது. தாய்லாந்து மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நீச்சல் வல்லுநர்களைக்‍ கொண்ட குழுவினரும், பாதுகாப்புப் படையினரும் இந்த சாகச முயற்சியில் ஈடுபட்டனர். இதன் பலனாக நேற்று 5 பேரும் குகையிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்‍கு கொண்டுசெல்லப்பட்டனர். உலகிலேயே இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சாகச செயலில் ஈடுபட்டு மனித உயிர்களைக்‍ காப்பாற்றிய சம்பவம் வேறு இருக்‍க முடியாது என மீட்புக்‍ குழுவினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து குகையில் சிக்‍கிய சிறுவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதற்கு உலகின் பல்வேறு நாடுகளைக்‍ சேர்ந்த பொதுமக்‍களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மரண பயத்தை ஏற்படுத்திய அந்த குகைக்கு இனி யாரும் செல்லாத வகையில் தாய்லாந்து அரசு அதற்கு உடனடியாக சீல் வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00