சிரியா ராணுவம் 7 ஆண்டுகளுக்‍குப் பிறகு டமாஸ்கஸ் நகரை தனது முழு கட்டுப்பாட்டுக்‍குள் கொண்டு வந்துள்ளது

May 22 2018 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்‍ மற்றும் சிரியாவின் பல பகுதிகளை ​ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆக்‍கிரமித்து கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்தனர். இழந்த பகுதிகளை மீட்க ஈராக் மற்றும் சிரியா ராணுவம் போர்புரிந்து வந்தன. இந்த நாடுகளுக்‍கு அமெரிக்‍கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவி புரிந்தன. இந்நிலையில், ஈராக்‍கிடம் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலுமாக விரட்டப்பட்டுவிட்ட நிலையில், சிரியாவிலும் தீவிரவாதிகளை ஒடுக்‍க முழு வீச்சில் நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டது. சிரியாவில் அல்-ஹஜார் அல்-அஸ்வாத் மாவட்டத்தை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, டமாஸ்கஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டுக்‍குள் கொண்டு வந்துள்ளது. 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சண்டை முடிவுக்‍கு வந்துள்ளது. டமாஸ்கஸ் நகரை கைப்பற்றியதைத் தொடர்ந்து, வீடுகள் உள்ளிட்ட மறைவிடங்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பதுங்கியிருக்‍கிறார்களா என ராணுவம் தீவிர சோதனை நடத்தி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00