இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றியது பராகுவே : அமெரிக்காவை பின்பற்றி திடீர் முடிவு

May 22 2018 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவைப் பின்பற்றி, பராகுவேயும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை, சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகருக்கு மாற்றியுள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க இருப்பதாகவும், தற்போது Tel Aviv நகரில் உள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அறிவித்தார்.

இந்த முடிவு, பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் என்று பலர் எச்சரித்தனர். எனினும், திட்டமிட்டபடி அமெரிக்க தூதரகம் டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு கடந்த 14-ம் தேதி மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் எல்லை அருகே தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவைப் பின்பற்றி கவுதமாலாவும் ஜெருசலேம் நகருக்கு தனது தூதரகத்தை கடந்த 16-ம் தேதி மாற்றிக்கொண்டது. இதையடுத்து, தற்போது மூன்றாவதாக பராகுவேயும் ஜெருசலேம் நகரில் தூதரகம் திறந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00