தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு

May 21 2018 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு இடையே தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை ஒரு முறையும், சீன அதிபர் ஜின்பிங்கை இரு முறையும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்தித்து பேசினார். டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் இணக்கமான கருத்துக்களையே வெளியிட்டு வந்தார்.

ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் தென்படுகிறது. ஒருதலைப்பட்சமாக தன்னை அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா நிர்ப்பந்திப்பதாக வடகொரியா கருதுகிறது. அது மட்டுமின்றி டிரம்புடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்யவும் தயங்கப்போவது இல்லை என்கிற ரீதியில் அந்த நாடு கருத்து தெரிவித்தது. மேலும் டிரம்பும் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை கைவிட்டால், அவர் ஆட்சி அதிகாரத்தில் தொடர்வார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாவிடில் வடகொரியா அழிவை சந்திக்க வேண்டியது வரும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இது பற்றி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், சமீப காலமாக வடகொரியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி டிரம்பும், மூன் ஜே இன்னும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டதாக கூறப்பட்டு உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00