கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை Meghan markle திருமணம் - ராணி எலிசபெத் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

May 20 2018 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கலே திருமணம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி. இவருக்கும் மேகன் மார்கலுக்கும் இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அரச குடும்ப திருமணத்தை ஒட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி-மேகன் இருவருக்காகவும் பிரார்த்தனை நடந்தது.

இதில் ராணி எலிசபெத், ஹாரியின் சகோதரர் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர்கள் தவிர திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் 2 ஆயிரத்து 640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். மேலும் சாலைகளில் நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் நடைபாதைகளில் இடம்பிடித்து காத்திருந்தனர்.

இதையடுத்து இளவரசர் சார்லஸ் மணமகளின் கையை பற்றியபடி தேவாலயத்திற்குள் அழைத்து சென்றார். பின்னர் இசைக்குழுவினரின் பிரார்த்தனை பாடல்களுடன் திருமண மடல் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் இருவரும் ஊர்வலமாக சென்றனர். சாலைகளின் ஓரம் பிரிட்டன் நாட்டு கொடிகளை கைகளில் ஏந்தியபடி பல்லாயிரக்கணக்கான மக்கள் மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கினர். திருமணம் நடைபெற்ற இடம் மற்றும் நகரின் மற்ற பகுதிகளில் ஏராளமான போலீசாரும், உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00