ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்கா, அங்கு தனது தூதரகத்தை திறந்திருப்பதால், பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன

May 18 2018 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்‍கா, அங்கு தனது தூதரகத்தை திறந்திருப்பதால், பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்‍கு ஆசியாவில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்‍கை தடைபட்டுள்ளது.

ஜெருசலேமை பாலஸ்தீனமும், இஸ்ரேலும் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அதை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்‍க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அங்கு விரைவில் தூதரகம் திறக்‍கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பாலஸ்தீனம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ரஷ்யா உட்பட பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தரும் நாடுகளும் டிரம்பின் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், ஜெருசலேமில் கட்டப்பட்டுள்ள அமெரிக்‍காவின் புதிய தூதரகம் கடந்த 14ம் தேதி திறந்துவைக்‍கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் காசா எல்லைப்பகுதியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்‍கிச் சூடு நடத்தியது. இதில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்‍கணக்‍கானோர் காயமடைந்தனர்.

இருப்பினும் பாலஸ்தீனத்தில் அமெரிக்‍கா மற்றும் இஸ்ரேலுக்‍கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. Ramallah நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், அமெரிக்‍கா மற்றும் இஸ்ரேலுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்கள் எழுப்பப்பட்டன. வாஷிங்டனிலும் பாலஸ்தீனர்கள் கண்டன பேரணி நடத்தினர்.

காசாவில் 60க்‍கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியிருப்பது ஐக்‍கிய நாடுகள் சபை செயலிழந்த நிலையில் இருப்பதை காட்டுவதாக துருக்‍கி அதிபர் Erdogan குற்றம்சாட்டியுள்ளார். உலகமே எதிர்த்தாலும் பாலஸ்தீனர்களுக்‍கு துருக்‍கி தொடர்ந்து ஆதரவு அளிக்‍கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்‍க அதிபர் டிரம்பின் முடிவுக்‍கு ஆதரவளிக்‍கும் விதமாக, மத்திய அமெரிக்‍க நாடான கவுதமாலா, ஜெருசலத்தில் தனது தூதரகத்தை திறந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கவுதமாலா அதிபர் Jimmy Moralesம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் Netanyahu உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, காசாவில் பாலஸ்தினர்கள் 60க்‍கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த மரணங்கள் வன்முறையைதான் மேலும் தோற்றுவிக்‍கும் என அவர் கவலைதெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00