மோனார்க் பட்டாம்பூச்சிகளை பாதுகாப்பது குறித்து மெக்ஸிகோ அரசு ஆலோசனை
Mar 6 2018 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் இருந்து வரும் மோனார்க் பட்டாம்பூச்சிகளை பாதுகாப்பது குறித்து மெக்ஸிகோ அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான மோனார்க் வகை பட்டாம்பூச்சிகள் மெக்ஸிகோவிற்கு இடம்பெயர்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு அவற்றின் வருகை 15 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது வரும் மோனார்க் பட்டாம் பூச்சிகள், மெக்ஸிகோவில் இருந்து கனடாவின் வடக்கு நோக்கி செல்லும் என்றும், மீண்டும் மெக்ஸிகோ வரும்போது அவை 3-ம் தலைமுறை பட்டாம்பூச்சிகளாக உருவெடுக்கும் என்றும் மெக்ஸிகோ பட்டாம்பூச்சி பாதுகாப்பு கழகம் தெரிவித்துள்ளது.