அமெரிக்‍கா - வடகொரியா சமாதான பேச்சுவாத்தையில் ஈடுபடுவதற்கான முயற்சி : தென்கொரியா தூதுக்‍குழு வடகொரிய அதிபரிடம் பேச்சுவார்த்தை

Mar 6 2018 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

பரம எதிரிகளாக உள்ள அமெரிக்‍காவும், வடகொரியாவும் சமாதான பேச்சுவாத்தையில் ஈடுபடுவதற்கான முயற்சியில் தென்கொரியா ஈடுபட்டுள்ளது. இதற்காக அந்நாட்டின் 10 பேர் கொண்ட தூதுக்‍குழு வடகொரிய அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, ஏவுகணைச் சோதனைகளையும், அணுகுண்டு சோதனைகளையும் வடகொரியா தொடர்ந்து நடத்தி வருவதால், கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டி, பிரச்னைக்‍கு தீர்வுகாண வழி ஏற்படுத்தியது. இதன் விளைவாக அமெரிக்‍காவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருநாடுகளுக்‍கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்‍காவின் நேசநாடான தென்கொரியா இறங்கியுள்ளது. முதற்கட்டமாக தென்கொரிய தேசிய பாதுகாப்பு தலைவர் Chung Eui-Yong தலைமையில், 10 பேர் கொண்ட குழு, நேற்று பிற்பகல் வடகொரியாவுக்‍கு புறப்பட்டுச் சென்றது. அக்குழு, வடகொரிய அதிபர் Kim Jong Un-ஐ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டிருந்த இத்தகைய சந்திப்பு, தற்போது நிகழ்ந்துள்ளது, கொரிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00