சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்‍கு எதிராக நடைபெறும் உள்நாட்டுப்போரில் குழந்தைகள் கொல்லப்படும் அவலம் - ரஷ்யா அறிவித்த போர் நிறுத்தத்தை மீறி தாக்‍குதல் நீடிப்பதால் அச்சத்தின் பிடியில் பொதுமக்‍கள்

Feb 28 2018 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய கிழக்‍கு ஆசிய பகுதியான சிரியாவில் உள்நாட்டுப்போர் மேலும் தீவிரமாகி இருப்பதால், ரஷ்யா அறிவித்துள்ள போர் நிறுத்தத்தை மீறி தாக்‍குதல் நீடிக்‍கிறது. இதனால் அங்கு வசிக்‍கும் பொதுமக்‍கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் சிக்‍கித் தவிக்‍கும் சிரியாவில் நிலைமை தற்போது மிகவும் மோசமாகியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் வசம் இருக்‍கும் கிழக்‍கு கவுட்டா பகுதியில் கடந்த சில நாட்களாக அரசுப் படைகளுக்‍கும், கிளர்ச்சியாளர்களுக்‍கும் இடையே மோதல் மிகக்‍கடுமையாக உள்ளது. நேற்று முன்தினம் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படைகளும், அதற்கு ஆதரவான ரஷ்ய படைகளும் இணைந்து நடத்திய தாக்‍குதலில், நூற்றுக்‍கணக்‍கான அப்பாவி பொதுமக்‍கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஏராளமான குழந்தைகளும் பலியானதால், உலகம் முழுவதும் இந்த தாக்‍குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்‍கள் மனிதக்‍ கேடயங்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படையினர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சண்டையின் தீவிரம் கருதி இதனை உடனடியாக நிறுத்திக்‍கொள்ள வேண்டும் என ரஷ்யா வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இதனை மீறி கிழக்‍கு கவுட்டா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து தாக்‍குதல் நடத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டு போரை மேலும் தீவிரமாவதை தடுக்‍கும் வகையில், கிளர்ச்சியாளர்கள் முகாமிட்டுள்ள பகுதியில் தாக்‍குதலை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைக்‍க வேண்டும் என ஏற்கெனவே ஐ.நா. பாதுகாப்புக்‍குழு தீர்மான நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00