ஈரானில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தை தேடும் பணி தீவிரம் : உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் ஏற்பாடுகள் மும்முரம்

Feb 20 2018 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரான் நாட்டில் விபத்துக்குள்ளான பயணிகளின் விமானத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஈரானில் நேற்றுமுன்தினம் தலைநகர் டெக்ரானில் இருந்து விமானம் ஒன்று அங்குள்ள யசூஜ் நகரை நோக்கி சென்றபோது தேனா என்ற மலையின் மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 60 பயணிகள், விமான சிப்பந்திகள் 6 பேர் என 66 பேரும் பலியாகிவிட்டனர்.

விபத்து நடந்த மலைப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்தை நேற்று சென்றடைந்து மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கினர். கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் விபத்தில் சிக்கியது தற்போது, உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிக்கு பின் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டனியோ குட்ரஸ் தனது இரங்கலைத் தெரிவித்து உள்ளார். அதில் இறந்தவர்களுக்கு எனது இதயப்பூர்வ அனுதாபங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00