பிரிட்டன் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி : கரும்பச்சை நிற ஆடை அணிந்து வந்த இளவரசி கேட் மிடில்டன்

Feb 20 2018 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு இளவரசி கேட் மிடில்டன் கரும் பச்சை நிற ஆடை அணிந்து வந்தது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட் மிடில்டன். இவர் அணியும் ஆடைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்துவது வழக்கம். இந்நிலையில், பிரிட்டனில் நடைபெற்ற "பாப்தா" விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம்சுடன், இளவரசி கேட் மிடில்டன் கலந்து கொண்டார். முன்னதாக, பெண்கள் பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவ்விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

விழாவிற்கு இளவரசி கேட் மிடில்டன் கருப்புநிற உடை அணிந்து வருவாரா என்ற எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவர் கரும் பச்சை நிற கவுன் அணிந்து வந்திருந்தார். பச்சை நிற கவுனுக்கேற்ப நெக்லஸ் மற்றும் மோதிரம் ஆகியவற்றை கேட் மிடில்டன் அணிந்திருந்தார். விழாவில் பங்கேற்ற பெரும்பாலானோர் கருப்பு நிற ஆடையில் வந்த நிலையில் கேட் மிடில்டன் பச்சை நிற ஆடை அணிந்து வந்தது சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் கேட் மிடில்டன் கருப்பு நிற ஆடையை புறக்கணித்து ஏன்? என்றும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதுபோன்ற விஷயங்களில் தலையிட்டு ஆதரவு தரமாட்டார்கள் என்றும் கருத்துக்கள் பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00