ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மாநாடு : நடிகர் ஷாருக்கான் கிறிஸ்டல் விருது

Jan 23 2018 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கிறிஸ்டல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர்கள், முன்னணி தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவும் சுவிட்சர்லாந்து சென்றுள்ளது. இந்த குழுவில் பாலிவுட் நடிகர் ஷாருக்‍கானும் சென்றுள்ளார்.

இந்நிலையில், உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கிறிஸ்டல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஷாருக்‍கானின் மனிதாபிமான பணிகளுக்‍காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவருடன், ஹாலிவுட் நடிகை Cate Blanchett, இசைக்கலைஞர் எல்டன் ஜான் ஆகியோரும் கிறிஸ்டல் விருது வழங்கி கௌரவிக்‍கப்பட்டனர். இதனையடுத்து, டாவோசில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஷாருக்கான், தமது மிகச்சிறிய பணிக்காக மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருப்பதாகவும், இது தமக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00