ஆஸ்திரேலியாவில் கார் மோதல் விவகாரத்தில் குற்றச்சாட்டு பதிவு : அஃப்கனிஸ்தான் அகதி மீது கொலை முயற்சி வழக்கு

Dec 24 2017 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், பாதசாரிகள் மீது காரை மோதச் செய்த அஃப்கனிஸ்தான் அகதி மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர சாலைச் சந்திப்பில், கடந்த 21-ம் தேதியன்று, சாலையைக் கடந்து கொண்டிருந்தவர்கள் மீது, சயித் நூரி என்பவர், வேண்டுமென்றே காரை வேகமாக ஓட்டிச் சென்று மோதினார். அஃப்கனிஸ்தான் அகதியான சயித் நூரி, பாதசாரிகள் சாலையைக் கடக்கத் தொடங்கியதும், தனது காரை வேகமாக ஓட்டிச் சென்று மோதியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

கைது செய்யப்பட்ட சயித் நூரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், முன்னுக்குப் பின் முரணாக சயித் நூரி பேசி வருவதால், தாக்குதலுக்கான காரணம் குறித்து முடிவுக்கு வர இயலாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சயித் நூரி மீது, கொலை முயற்சி மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00