இஸ்ரேலின் புதிய தலைநகராக ஜெருசலேம் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Dec 7 2017 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. சீனாவும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் ஜெருசலேம் நகரை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அதனை தலைநகராக அறிவிப்பது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என ஐ.நா. சபை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் டெல்அவிவ்-ல் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00