சீனாவில் நடைபெற்ற 67வது உலக அழகிப் போட்டி - இந்தியாவின் மனுஷி சில்லார் உலக அழகியாக மகுடம் சூடி சாதனை

Nov 19 2017 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் சன்யா நகரில் நடைபெற்ற உலக அழகப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லார் 2017-ம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூடினார்.

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடம் சூடினார். இரண்டாவது இடத்தை மெக்‍சிகோ அழகியும், 3வது இடத்தை இங்கிலாந்து அழகியும் பெற்றனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் கடந்த ஜூன் 25ம் தேதி நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியிலும் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்‍கது.

கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வானார். அதன் பிறகு 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். மனுஷி சில்லார் இந்தியாவுக்‍கு 6வது உலக அழகிப் பட்டத்தை பெற்றுத் தந்துள்ளார். இவருக்‍கு முன்னர், Reita Faria, ஐஸ்வர்யா ராய், டயானா ஹைடன், யுக்‍தா முகி, பிரியங்கா சோப்ரா ஆகியோர் உலக அழகி பட்டத்தை இந்தியாவுக்‍கு பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00