ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 140 பேர் உயிரிழப்பு - 800-க்‍கும் மேற்பட்டோர் காயம் - இடிபாடுகளில் சிக்‍கி உயிருக்‍குப் போராடுவோரை மீட்கும் பணிகள் தீவிரம்

Nov 13 2017 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில், நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில், நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்கள் உடைந்து விழுந்தன. 140 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடப்படலாம் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00