வெளிநாடுகளில் வரிச்சலுகையை பயன்படுத்தி முதலீடு செய்தவர்களின் பட்டியலில் சன் குழுமம், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், இங்கிலாந்து அரசி உள்ளிட்டோருக்‍கு இடம் - Paradise Papers ஆவணம் அம்பலம்

Nov 7 2017 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி முதலீடு செய்தவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் ஆகியோரது பெயர்கள் Paradise Papers இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகைகளை பயன்படுத்தி பிரபலங்கள் பலரும் அந்நாடுகளில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஊடக பங்குதாரர்கள், Paradise Papers என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். இதில் உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், கம்பெனிகள் என 31 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில், கடந்த 2004 - 2007 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த சவுக்‍கத் அஜீஸ் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன. இவர் தனது மனைவி, குழந்தைகள், பேரக்‍குழந்தைகள் ஆகியோரின் பெயரில் அமெரிக்‍காவில் அறக்‍கட்டளை நிறுவி, அதன் வாயிலாக முதலீடுகள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்தின் தனியார் எஸ்டேட்டும் இந்த Paradise Papers ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தனியார் எஸ்டேட் சார்பில் பல லட்சம் பவுண்ட்டுகள் வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சன்குழுமமும், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோரும் வரிச்சலுகையை பயன்படுத்தி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் Paradise Papers தகவல் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00