மசூத் அஸாரை ஐ.நா மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை

Nov 3 2017 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர் இந்த அமைப்பின் தலைவரான மசூத் அஸார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மசூத் அஸாரைசர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளித்த நிலையில் சீனா மட்டும் ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால் சீனா ஆதரவு தராததார் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முடிவை ஆறு மாதங்களுக்கு நிறுத்திவைப்பதாக சீனா தெரிவித்தது. தற்போது இந்த ஆறு மாதகால அவகாசம் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டது.ஆனால் இரண்டாவது முறையாக சீனா இதற்கு ஆதரவு தராமர் முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00