அஃப்கனிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்ற 2,500 கிலோ வெடி பொருளுடன் லாரி பறிமுதல்

Oct 16 2017 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கனிஸ்தான் தலைநகர் காபூலுக்கு, இரண்டாயிரத்து 500 கிலோ வெடி பொருளுடன் சென்ற லாரியை, சோதனைச் சாவடி போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஃப்கனிஸ்தான் தலைநகர் காபூல் மீது லாரி குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, நேற்று இரவு, காபூல் நகர எல்லைப்பகுதிகளில் வாகன பரிசோதனை நடைபெற்றது. அப்போது வேகமாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட போலீசார் முயன்றனர். லாரியை ஓட்டிவந்த நபர், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

அந்த லாரியை சோதனையிட்டபோது, தக்காளி பெட்டிகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரத்து 500 கிலோ அளவிலான வெடிபொருட்களையும், வெடிகுண்டுகளையும் கண்டுபிடித்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். உரிய நேரத்தில் அந்த லாரியை மடக்கிப் பிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக காபூல் நகர போலீசார் தெரிவித்தனர்.

காபூல் நகரில், கடந்த மே மாதம் நடைபெற்ற லாரி குண்டு தாக்குதலில் 150-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00