அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் சுகாதார திட்டத்திற்கு மாற்றாக புதிய சுகாதார திட்டம் - அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல்

Oct 13 2017 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்த சுகாதார திட்டத்திற்கு மாற்றாக புதிய சுகாதார திட்டத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய சுகாதார திட்டத்துக்கு மக்களிடையே பெரும் ஆதரவு நிலவி வருகிறது. ஆனால், கடந்த அதிபர் தேர்தலின் போது இந்த சுகாதார திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, அதிபர் பதவியேற்றபின் புதிய சுகாதார திட்டத்தை நாடாளுமன்றம் மூலம் நிறைவேற்ற இருமுறை முயற்சி எடுத்தார். ஆனால், அவரது சொந்த கட்சியான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், டிரம்ப்பின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனைதொடர்ந்து புதிய சுகாதார திட்டத்தை நிர்வாக உத்தரவு மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள டிரம்ப், அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த திட்டம் மூலம் சிறிய நிறுவனங்கள், அதன் ஊழியர்களுக்கு குறைந்த செலவிலான சுகாதார காப்பீட்டு திட்டங்களை வழங்க வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00