டொனால்டு டிரம்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப், தான்தான் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று கூறியுள்ளது விளம்பரம் தேடுவதற்காகவே என டிரம்ப்புடன் தற்போது வாழ்ந்துவரும் மெலனியா கருத்து

Oct 11 2017 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

டொனால்டு டிரம்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப், தான்தான் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று கூறியுள்ளது, விளம்பரம் தேடுவதற்காகவே என டிரம்ப்புடன் தற்போது வாழ்ந்துவரும் மெலனியா கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபரின் மனைவிக்கு முதல் பெண்மணி என்ற அந்தஸ்து கிடைக்கும். இந்நிலையில், அமெரிக்‍க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப்புக்‍கு 3 மனைவிகள் உள்ளனர். அவர்களில் ஒருவரை விவாகரத்து செய்து விட்ட டிரம்ப், தற்போது 3-வது மனைவி மெலானியாவுடன் வாழ்ந்து வருகிறார். எனவே மெலானியாவுக்கு அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிரம்பின் முதல் மனைவி இவானா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சமீபத்தில் இவானா தான் எழுதிய 'ரெய்சிங் டிரம்ப்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அவர், "நான்தான் டொனால்டு டிரம்பின் முதல் மனைவி, எனவே நான்தானே அமெரிக்காவின் முதல் பெண்மணி... சரிதானே" என்றார்.

மேலும் டிரம்ப் பற்றி கூறும்போது, தன் முன்னாள் கணவர் டிரம்புடன் 2 வாரங்களுக்கு ஒருமுறை பேசுவேன் என்றும், வெள்ளை மாளிகையின் நேரடி டெலிபோன் நம்பர் தன்னிடம் உள்ளதாகவும் இவானா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இவானாவின் பேட்டிக்கு மெலானியா பதில் அளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் வசிக்‍கும் தான், அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்துக்கு கவுரவம் சேர்க்க நினைப்பதாகவும், வாஷிங்டன் நகரை நேசிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், விளம்பரத்திற்காகவும், தான் எழுதி வெளியிட்டுள்ள புத்தகம் நன்கு விற்பனை ஆக வேண்டும் என்பதற்காகவே, இவானா இது போன்ற கருத்துக்‍களை பேசி வருவதாக, டிரம்புடன் தற்போது வாழ்ந்து வரும் மெலானியா டிரம்ப் கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்பை இவானா கடந்த 1977-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு டொனால்டு ஜூனியர், இவாங்கா மற்றும் எரிக் டிரம்ப் என்ற 3 குழந்தைகள் உள்ளனர். டிரம்ப், மர்லா மாப்பிள்சை காதலிப்பது தெரிந்ததும் 1990-ம் ஆண்டில், டிரம்பை இவானா விவாகரத்து செய்துட்டார் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00