தாய்லாந்து நாட்டில் சிறைச்சாலை போன்று தங்கும் விடுதி ஒன்று வடிவமைப்பு : வாடிக்கையாளர்களுக்கு கைதிகளுக்கான சீருடை போன்ற ஆடைகள் வழங்கப்படுகின்றன

Aug 19 2017 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்து நாட்டில் வாடிக்‍கையாளர்களை கவரும் வகையில் சிறைச்சாலை போன்று தங்கும் விடுதி ஒன்று வடிவமைக்‍கப்பட்டுள்ளது. இங்கு தங்குவோருக்கு கைதிகளுக்கான சீருடை போன்ற ஆடைகள் வழங்கப்படுகின்றன.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்‍கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்நாட்டின் வருவாயில் சுற்றுலாத்துறை முக்‍கிய பங்குவகித்து வரும் நிலையில், பயணிகளை கவர பல்வேறு நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அவர்களை கவருவதற்காக சிறை போன்ற அமைப்பில் ஒரு உணவு விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அறைகள் அனைத்தும் சிறைச்சாலைகளில் இருப்பதை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்கு தங்கவருவோருக்கு கைதிகளுக்கான சீருடை போன்ற ஆடைகள் வழங்கப்படுகின்றன. விளக்குகள் மற்றும் கதவுகளும் சிறையை போன்றே வடிவமைத்துள்ளனர்.

1994-ம் ஆண்டில் வெளியான 'தி ஷாசான்க் ரெடம்சன்' என்ற ஆங்கில படம் வெளியானது. அதைப் பார்த்து இந்த உணவு விடுதியை வடிவமைத்ததாக அதன் உரிமையாளர் கூறினார். ஒரேயொரு முறை வரும் வாடிக்கையாளர்களை குறி வைத்து இந்த ஓட்டலை தொடங்கியதாகவும், ஆனால் ஒரு முறை வந்தவர்கள் மீண்டும் திருப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00