இளம் வயதில் நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய்க்கு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க அழைப்பு - அரசியல், தத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்க முடிவு

Aug 18 2017 9:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகிலேயே மிக இளம் வயதில் நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய்க்கு தற்பொழுது லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெண் கல்விக்காக போராடி வந்த மலாலா யூசுப்சாய் தாலிபான்களின் எதிர்ப்பால் தலையில் சுடப்பட்டு பின்னர் உயிர் பிழைத்தார். இதையடுத்து, பெண் கல்வியை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். இதற்காக அவருக்கு 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, லண்டனில் உள்ள பள்ளியில் இணைந்து பயின்று வந்த மலாலாவுக்கு தற்பொழுது, பாரம்பரிய பெருமை வாய்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுவதாக குறிப்பிட்ட மலாலா, அரசியல், தத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பல்கலைக்கழகத்தில் இதே பாடப்பிரிவில் முன்னாள் பிரிட்டிஸ் பிரதமர், டேவிட் கேமரன், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசிர் பூட்டோ ஆகியோர் கல்வி பயின்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00