சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஷென்யாங் நகரம் தண்ணீரில் மூழ்கியது - மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

Aug 18 2017 9:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் லயோனிங் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் மாகாணத்திற்குட்பட்ட ஷென்யாங் நகரம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வடகிழக்கு சீனாவின் லயோனிங் மாகாணத்தின் ஷென்யாங் நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பரவலாக பெய்த பலத்த மழையால் சுமார் ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. நகரின் முக்கியமான 21 பகுதிகளில் தண்ணீரில் மூழ்கின. இதனால், வாகனப்போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், நீர் வடிகால் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தண்ணீரை வெளியேற்றுவதில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கனமழையால் மின்கம்பங்கள் சரிந்ததால் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00