ஸ்பெயின் நாட்டில், மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து கார் மூலம் நிகழ்த்தப்பட்ட அதிபயங்கர தாக்குதல் - பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு - ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம்

Aug 18 2017 9:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தில் பலர் உயிரிழந்த சம்பவம், உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, இன்று அதிகாலை பார்சிலோனா அருகே நிகழ்த்தபட்ட மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் பலர் படுகாயமடைந்ததால் அந்நாடு முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்பல்ஸ் என்ற இடத்தில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். அப்பகுதியை குறிவைத்து மர்ம நபர் ஒருவர், வேன் ஒன்றை வேகமாக செலுத்தி, சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் அதிபயங்கரமாக மோதினார். சில மீட்டர் தூரம் வரை மக்கள் மீது மோதியபடி வேனை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்திய இந்த சம்பவத்தில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கியும், தூக்கி வீசப்பட்டும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தள்ளது, இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள், இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதால், பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளனர். வேனை ஓட்டி வந்த மர்ம நபர் தப்பியோடிவிட்டார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பார்சிலோனா நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய வேன் ஓட்டுநரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலை நிகழ்த்தியது தாங்கள்தான் என சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில், பாரிசிலோனாவை அடுத்த "அல்கனார்" நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். லாஸ் ராம்பல்சில் நடந்த தாக்குதலுக்கும், இந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்புள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் பார்சிலோனா அருகேயுள்ள Cambrils என்ற மற்றொரு பகுதியில் அதே பாணியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், காவல்துறை அதிகாரி உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாரும் உயிரிழந்தார்களா அல்லது காயமடைந்தார்களா என்பது குறித்து, ஸ்பெயின் நாட்டில் உள்ள இந்திய தூதகரத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுற்றுலா பயணிகள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தில் விளக்குகள் அனைக்கப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவங்களால் ஃபிரான்ஸ் நாடு முழுவதும் மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00