கனடாவில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன வைர மோதிரம் கேரட் சாகுபடியின்போது மீண்டும் கிடைத்ததால் உரிமையாளர் மகிழ்ச்சி

Aug 17 2017 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவில் 13 ஆண்டுகளுக்‍கு முன்னர் தொலைந்து போன வைர மோதிரம் கேரட் சாகுபடியின்போது மீண்டும் கிடைத்தது கண்டு அதன் உரிமையாளர் ஆச்சரியமடைந்தார்.

கனடாவில் உள்ள அல்பெர்டா பகுதியில், மேரி கிராம்ஸ் என்ற பெண்மணி கடந்த 2004ம் ஆண்டு தனது திருமண மோதிரத்தை தனது குடும்பப் பண்ணையில் வேலை பார்த்துக்‍ கொண்டிருந்த போது தொலைத்து விட்டார். வைர கற்கள் பதிக்‍கப்பட்ட விலைமதிப்பற்ற அந்த மோதிரத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்‍கவில்லை. இந்நிலையில் 13 ஆண்டுகளுக்‍குப் பிறகு தற்போது அந்த மோதிரம் கிடைத்துள்ளது. ஒரு வளர்ச்சியடைந்த கேரட்டின் நடுவில் அந்த மோதிரம் இருந்தது கண்டு மேரி கிராம் ஆச்சரியம் அடைந்தார். தரைக்‍கு அடியில் வளரும், கேரட் விதைகளுக்‍கு நடுவே இந்த மோதிரம் மாட்டிக்‍ கொண்டதால், வளர்ச்சியடைந்து அறுவடைக்‍குப் பின்னர் அந்த கேரட்டுடன் மோதிரமும் தற்போது வெளிச்சத்துக்‍கு வந்துள்ளது. இதனால், மேரி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00