சிக்கிம் மாநிலம் டோக்லாம் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் : அமெரிக்கா கருத்து

Aug 16 2017 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிக்கிம் மாநிலம் Doklam பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க, இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்‍கும் பணிகளை மேற்கொண்டது. இதனை இந்தியா தடுத்து நிறுத்தும் வகையில், இந்தியா வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மோதல் போக்கை கைவிட்டு, இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்‍கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Heather Nauert, டோக்லாம் பகுதியில் இரண்டு மாதமாக பதற்றம் நிலவுதாக குறிப்பிட்டார். இதனால், இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு வலுத்துள்ளதால், தூதரக பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00