சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது ஏவுகணைகள் வீசி பழி தீர்க்கத் தொடங்கியது ஈரான் - ஈராக் போரில் பயன்படுத்திய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் உளவுத்துறை பரபரப்பு தகவல்

Jun 19 2017 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் விதமாக சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் மீது, ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றம் மற்றும் வழிபாட்டு தலத்தில் கடந்த 7ம் தேதி மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து, ஈரானில் உள்ள ஷியா பிரிவினர் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும், இதேபோன்று சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ். அமைப்பு மிரட்டல் விடுத்தது.

இந்நிலையில், ஈரான், தங்கள் நாட்டின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் விதமாக சிரியாவில் உள்ள ஐ.எஸ்.நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈரான் ஏவிய ஏவுகணைகள் ஆயிரத்து 200 கிலோமீட்டர் வரையில் சென்று தாக்கி அழிக்கும் Shahab-3 நடுத்தரமான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், கடந்த 1988-ஆம் ஆண்டு ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளை கொண்டு, தற்போது சிரியாவில் உள்ள Deir el-Zour பகுதியில் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகவும், பெருளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00