அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய கடுமையான சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்

Apr 30 2017 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய கடுமையான சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸில் ஒவ்வொரு ஆண்டும் கடுமையான சூறாவளிக் காற்று வீசி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அங்கு பருவநிலை மாற்றம் கடுமையாக இருப்பதால் சேதமும் பெரிய அளவில் ஏற்படுகிறது. இந்நிலையில், கடற்கரை மாகாணமான டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ் பகுதியில் நேற்று வீசிய கடுமையான சூறாவளிக் காற்றால் அந்நகரமே பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது. இந்த சூறாவளிக் தாக்குதலில் சிக்கி 5 பேர் வரை உயிரிழந்தனர். பலத்த காற்று மற்றும் கனமழையால் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். கார்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த சேதமடைந்தன. Canton பகுதியை 3 கடுமையான சூறாவளிப் புயல் தாக்கியுள்ளதாக அம்மாகாண வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரெக் அப்போட் ஆங்காங்கே சிக்கியிருப்பவர்களை மீட்க 2 மீட்புப்படை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00