வடகொரியா-அமெரிக்கா இடையே போரை தவிர்க்கும் வகையில், மூன்றாவது நாடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

Apr 30 2017 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியா, அடுத்தடுத்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்துள்ளது. ஆனால், வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கெய்ரோவிலிருந்து தனது இருப்பிடத்திற்கு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு போப் பிரான்சிஸ் பேட்டி அளிக்கையில், வடகொரியா பிரச்சனையை தீர்க்க நார்வே போன்ற 3-வது நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அழிவு தரும் அணு ஆயுத போர் சிக்கலில் உலகம் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அப்படி ஒரு போர் வரும் பட்சத்தில் கணிசமான மக்கள் அழியக்கூடும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00