பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தொடர்பாக அரசுக்கும், ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை பத்திரிகைகளுக்கு வெளியிட்ட வெளியுறவுத்துறை சிறப்பு செயலாளர் பதவி நீக்கம்

Apr 30 2017 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தொடர்பாக, அரசுக்கும், ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை பத்திரிகைகளுக்கு வெளியிட்ட வெளியுறவுத்துறை சிறப்பு செயலாளரை, அந்நாட்டு பிரதமர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு, பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, அரசுத்துறை உயர் அதிகாரிகளுக்கும் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இது ஊடகங்களுக்கு தெரிந்து, செய்தி வெளியானது.

மிகவும் ரகசியமாக நடந்த இந்த கூட்டத்தின் விவரங்களை வெளியில் கசியவிட்டதற்கு பொறுப்பேற்று, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பதவி விலக நேரிட்டது. மேலும், இது குறித்து விரிவான விசாரணை நடத்த, குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில், ஊடகத்திற்கு தகவல் கசிய விட்டதில், வெளியுறவுத்துறை சிறப்பு செயலாளர் தாரிக் பதேமி குற்றவாளி என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து தாரிக் பதேமியை பதவி நீக்கம் செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே இதனை ராணுவம் நிராகரித்துள்ளது. மேலும், இது முழுமைபெறாத நடவடிக்கை என்றும் ராணுவம் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00