உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி : அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்

Apr 29 2017 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத்தடை ஆகியவற்றை அலட்சியப்படுத்தி, வடகொரியா அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது, போர் தொடுப்போம் எனவும் வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை, வடகொரியா மீண்டும் நடத்தியுள்ளது. இது தோல்வியில் முடிந்ததை தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இம்மாதத்தில் மட்டும், வடகொரியா நடத்தியிருக்கும் 3 வது ஏவுகணை சோதனை இதுவாகும். வடகொரியாவின் இந்த தொடர் நடவடிக்கைக்கு, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்காக, கடும் விளைவுகளை வடகொரியா சந்திக்க நேரிடும் என்றும் அந்நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனிடையே, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதை அடுத்து, அமெரிக்காவின் கார்ல் வின்சன் போர்க்கப்பல், ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுவரும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00