அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை - லண்டனில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பொதுமக்கள் தகவல்

Apr 29 2017 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று, 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவரது செயல்பாடுகள் திருபதியடையும் வகையில் இல்லை என லண்டனில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். அதனைதொடர்ந்து, மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்புவது, இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்ககூடிய புதிய ஆணை உள்ளிட்ட பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பின்னர் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று, நூறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரின் செயல்பாடுகள், அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் குறித்து லண்டனில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பலரும், டிரம்பின் செயல்பாடுகள் மோசனதாக உள்ளது என்றும், அவர் அபாயகரமானவர் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், டிரம்பின் கொள்கைகள் சரியானதாக இல்லை என தெரிவித்துள்ள மக்கள், அவரின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இதனிடையே, லட்சியத்திற்கு குறுக்கே காதல் வந்தால் என்னவாகும் என்பதை உணர்த்தும் திரைப்படமான, 6 ஆஸ்கர் விருதுகளை பெற்ற லா லா லேண்ட் திரைப்படத்தை நினைவு படுத்தும் வகையில், லண்டனில் சுவர் ஒன்றில், அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரசா மே இருவரும் நடனமாடுவது போன்ற சித்திரம் வரையப்பட்டுள்ளது. அதில், லீ லீ லாண்ட் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00