அமெரிக்காவிற்கு எதிரான மற்றொரு புதிய வீடியோவை வெளியிட்டது வடகொரியா - எத்தனை தடைகள் வந்தாலும் அணு ஆயுத சோதனைகள் தொடரும் என திட்டவட்டம்

Apr 28 2017 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவிற்கு எதிரான மற்றொரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ள வடகொரியா, எத்தனை தடைகள் வந்தாலும் அணு ஆயுத சோதனைகள் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஐ.நா.சபையும், அமெரிக்காவும், வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வடகொரியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளைமாளிகையை தனது அணுஆயுதத்தால் தாக்கி அழிப்பது போன்ற புதிய வீடியோ ஒன்றை வடகொரியாவின் இணையதளமான Meari-யில் வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனத்திமற்கு பேட்டியளித்த, வடகொரிய அரசின் மூத்த அதிகாரி Sok Chol Won, "வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனோபாவம் தொடரும் வரை தங்களது அணு ஆயுத சோதனை தொடரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00