அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பூத்துக்குலுங்கும் மலர்கள் - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு

Apr 28 2017 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண வனப்பகுதியில் மஞ்சள் நிற காட்டு மலர்கள் பூத்துக்குலுங்குவதை பலரும் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் லேக் எலிசினோர் பகுதியில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதுபோன்ற காலங்களில் அங்கு பாப்பி வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். மலைச் சரிவையொட்டிய வனப்பகுதி எங்கும் இந்த மலர்கள் ஒரே நேரத்தில் பூத்திருக்கும் காட்சி, மஞ்சள் நிற பட்டாடையை போர்த்தியதுபோல் ரம்மியமாக அமைந்துள்ளது. மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ஊதா நிறத்தில் பூத்திருக்கும் இந்த மலர் கூட்டத்தைக் காண, தேசிய பூங்காவையொட்டிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பலரும் அங்கு குவிகின்றனர். மலர்களின் நடுவே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல், மலர்களை பறித்து எடுத்துச் செல்லுதல் போன்றவற்றில் ஈடுபட்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். எல்சினோர் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதங்களில் பெய்த மழையும், தற்போது காணப்படும் குளிர்ச்சியான தட்பவெட்பமுமே பாப்பி பூக்கள் இந்த அளவிற்கு பூத்திருப்பதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00