சர்வதேச பூமி தினம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடைப்பிடிப்பு - பூமி வெப்பமயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுற்றுலாத் தலங்களில் விளக்குகள் அணைப்பு

Mar 26 2017 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச பூமி தினத்தையொட்டி, ரஷ்யா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தலைநகர் டெல்லியிலும், இந்நாளையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

உலக வெப்பமயம் பிரச்னையால் நாம் வாழும் பூமி தற்போது நாளுக்குநாள் சூடாகிவிடுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்கும் வகையிலும், வெப்பமயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25-ம் தேதி, சர்வதேச பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் அரசுக் கட்டடங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்டவற்றில் நேற்றிரவு மின் விளக்குகள் சிறிது நேரம் அணைக்கப்பட்டன. மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் முக்கிய கட்டடங்கள், வணிக வளாகங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிரான்சில் அமைந்திருக்கும் உலகின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் அலங்கார மின் விளக்குகள் அணைக்கப்பட்ட காட்சியை சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமானோர் நேரில் பார்வையிட்டனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற செஞ்சதுக்கம் மற்றும் கிரம்ளின் பகுதிகளில், காலநிலை மாற்றத்தை உணர்த்தும் வகையில், ஒரு மணிநேரம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. சுற்றுச்சூழல் மற்றும் உலக நிதியம் அமைப்பின் ஆதரவாளர்கள், மெழுகுவர்த்தி ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பூமி தினத்திற்கு ஆதரவு தெரிவித்து, துபாயின் அடையாளச் சின்னமாகவும், உலகிலேயே மிக உயரமானதாகவும் திகழும் Burj Khalifa கட்டடத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, மின்சார சிக்கனத்தை வலியுறுத்தினர்.

இதேபோல், உலகின் மற்ற பகுதிகளிலும் சர்வதேச பூமி தினத்தையொட்டி இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00