போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வி : ஐ.நா. மனித உரிமை ஆணையம் பகிரங்க குற்றச்சாட்டு

Mar 23 2017 2:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிபோரின்போது, லட்சக்கணக்கான தமிழ் மக்கள், இலங்கை ராணுவத்தினரால் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். பலர் படுகாயமடைந்ததோடு, தங்கள் உடமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். உலக சரித்திரத்தில் அகற்றமுடியாத கறையாக படிந்துவிட்ட இலங்கை இறுதிப்போரில், அந்நாட்டு ராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க் குற்றங்களுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இலங்கை போர்க்குற்றங்களை சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் விசாரிக்கவேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதற்கு இலங்கை மறுத்ததால், அந்நாட்டு அரசே விசாரணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஐ.நா. அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை ஆணைய அமர்வு கூட்டத்தில், ஆணையத் தலைவர் Zeid Ra'ad al Hussein உரையாற்றினார். இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என அப்போது அவர் தெரிவித்தார். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள Hussein, இலங்கை போர்க்குற்றம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த, சர்வதேச நீதிபதிகள்கொண்ட குழு அமைக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும், தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவும் வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00