பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகம் அருகே நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் : பிரிட்டன் தாக்குதலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் பலத்த பாதுகாப்பு

Mar 23 2017 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச பயங்கரவாத தூண்டுதலின்பேரில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகம் அருகே தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்த அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு காவல்துறை அதிகாரி, தாக்குதல் நடத்தியவர் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள Westminster பாலத்தில் காரை அதிவேகமாக ஓட்டிவந்த நபர், அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதினார். இதில், காரின் சக்கரத்தில் சிக்கியும், கார் மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டும் 40 பேர் காயமடைந்தனர். 3 பேர் உயிரிழந்தனர். பின்னர், காரில் இருந்து இறங்கிய அந்த நபர், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ் அதிகாரி P.C. Keith Palmer என்பவரை சரமாரியாக குத்தினார். இச்சம்பவத்தில் அவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, அந்த மர்ம நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பயங்கரவாத தாக்குதலை நேரில் பார்த்ததாக போலந்து நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Radoslaw Sikorski தெரிவித்தார். Westminster பாலத்தின் மீது டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் சம்பவத்தை காண நேரிட்டதாக குறிப்பிட்டஅவர், அதனை வீடியோவில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாத தூண்டுதலின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக பிரிட்டன் பயங்கரவாத தடுப்பு போலீஸ் உயர் அதிகாரி Mark Rowley தெரிவித்துள்ளார். ஆயினும், தாக்குதல் நடத்தியவர் பற்றிய விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். தாக்குதல் சம்பவத்தை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகம் அருகே நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் Theresa May, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், துணிச்சலாக செயல்பட்ட காவல்துறையினரை அவர் பாராட்டியுள்ளார்.

தாக்குதல் சம்பவம் மிகவும் பயங்கரமானது என்றும், நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் Jeremy Corbyn தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள Eiffel Tower விளக்குகள் சில மணித்துளிகள் அணைக்கப்பட்டன.

பிரிட்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull, இச்சம்பவத்தை அடுத்து, ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெர்மனி அதிபர் Angela Merkel உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00