சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல்பகுதி தீவுகளில், மேலும் சில ராணுவத் தளங்களை அமைக்க சீனா திட்டம் : பிரபல பத்திரிகை ''வாஷிங்டன் போஸ்ட்'' அம்பலம்

Feb 25 2017 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல்பகுதியில் உள்ள தீவுகளில், ராணுவத் தளங்களை அமைத்துவரும் சீன அரசு, மேலும் சில தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்சீனக் கடல்பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளிடையே, பிரச்னைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பிரச்னை தொடர்பாக, சர்வேதச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்தக் கடல்பரப்பில் அவ்வப்போது சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த கண்டனங்களை புறந்தள்ளிவிட்டு, கடற்பகுதிகளில் செயற்கை தீவுகளை அமைத்து அத்தீவின் மீது ராணுவத் தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தென் சீனக் கடல் விவகாரத்தில், அமைதியையும், சீனாவின் இறையான்மையும், அமெரிக்கா தொடர்ந்து காப்பாற்றும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் உள்ள தீவுகளில், சீனா ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கும் புகைப்படங்களை அமெரிக்காவின் ''வாஷிங்டன் போஸ்ட்'' பத்திரிகை வெளியிட்டுள்ளது. மேலும், இதுபோன்று பல ராணுவத் தளங்களை உருவாக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00