சர்வதேச அளவில் திரைப்படத்துறையினரின் கனவாக இருந்து வரும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்க நேரப்படி நாளை அறிவிக்கப்பட உள்ளது

Feb 25 2017 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச அளவில் திரைப்படத்துறையினரின் கனவாக இருந்து வரும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்க நேரப்படி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த விருதுக்கான போட்டியில் பங்கேற்றுள்ள சில திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்...

மனதை மயக்கும் இசையுடன் கூடிய காதல் கதையான "La La Land" என்ற திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு அடுத்தப்படியாக, அறிவியல் திரைப்படமான Arrival, போரை மையக்கதையாகக் கொண்ட திரைப்படமான Hacksaw Ridge, நவீன மேலைநாட்டு வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படமான Hell or High water, நாடகக் காவியங்களான Moonlight, Lion, Fences, Hidden Figures, Manchester by the Sea ஆகிய திரைப்படங்கள் 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகருக்கான பிரிவில், "La La Land" நாயகன் Ryan Gosling, Manchester by the Sea பட நாயகன் Casey Affleck, Fences நாயகன் Denzel Washington, Hacksaw Ridge பட நாயகன் Andrew Garfield ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதேபோல், சிறந்த நடிகைக்கான பிரிவில், "La La Land" நாயகி Emma Stone, Jackie பட நாயகி Natalie Portman, Florence Foster Jenkins திரைப்பட நாயகி Meryl Streep, Elle திரைப்படத்தின் நாயகி Isabelle Huppert ஆகியோரிடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் எஞ்சலீஸ் நகரில் உள்ளூர் நேரப்படி நாளை நடைபெறவுள்ள திரைப்படத்துறைக்கான பல்வேறு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், யாருக்கு விருது கிடைக்கும்? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00