அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : தமது கருத்துக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

Feb 25 2017 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் Srinivas Kuchibotla சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டு புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தமது கருத்துக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், அந்நாட்டு மக்களை மட்டுமின்றி, உலக நாடுகளையும் அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது. அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல அழுத்தத்தை அதிபர் கொடுத்து வருகிறார். இந்நிலையில், Kansas மாகாணத்தில் வசித்து வந்த இந்தியப் பொறியாளர் Srinivas Kuchibotla, நேற்று முன்தினம் தனது நண்பர் Alok Madasani உடன் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, அமெரிக்க கடற்படை வீரரான Adam Purinton என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிறவெறி காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுவதால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்பதை மையமாகக் கொண்டு அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், இதனை உறுதிப்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிபர் டிரம்பின் கருத்துக்கும், இந்த படுகொலை சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00