அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு : படுகொலைக்கு நிறவெறி காரணமாக இருக்கலாம் என்ற தகவலால் சர்ச்சை

Feb 24 2017 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகொலைக்கு நிறவெறி காரணமாக இருக்கலாம் என்ற தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், அந்நாட்டு மக்களை மட்டுமின்றி, உலக நாடுகளையும் அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கன்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த இந்தியப் பொறியாளர் ஸ்ரீனிவாஸ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளி Adam Purinton என்பவரை போலீசார்கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நிறவெறி காரணமாகவே கொலையாளி இச்செயலை செய்தார் என நேரில் பார்த்தவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00