அமெரிக்காவில் ஆஸ்கர் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - விருந்தினர்கள் அணியும் ஆடை மற்றும் ஆபரணங்களை கண்டு பார்வையாளர்கள் வியப்பு

Feb 23 2017 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

கலிபோர்னியாவில் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் இயக்குனர்கள் உற்சாகத்துடன் இவ்விழாவை எதிர்நோக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Beverly Hills நகரில் வரும் 26-ஆம் தேதி 89-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு துரிதமாக நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் விருந்தினர்கள் அணியும் ஆடை மற்றும் ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுளன. இந்த ஆபரங்கள் வைக்கப்பட்டுள்ள அரங்குகள் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் விழா அரங்குகள் வடிவமைக்கும் பணிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகின்றன. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான திரைப்படங்களின் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த விழாவை ஆர்வமுடன் எதிர் நோக்கியுள்ளனர். இந்த ஆண்டு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதுக்கு Moana, Zootopia, My Life as a Zucchini உள்ளிட்ட திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று Lucas Hedges, Mahershala Ali மற்றும் Dev Patel ஆகியோர் சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். கருப்பின பெண்களின் வரலாறை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட Hidden Figures சிறந்த திரைப்படத்துக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00