தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

Feb 22 2017 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் அமெரிக்க நாடான Bolivia-வில், அந்நாட்டு அதிபர், 4-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பெரும் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு மற்றும் தாதுவளம் மிகுந்த Bolivia-வில், கடந்த ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பில், அதிபர் Evo Morales-க்கு எதிராக 51 சதவீதம் பேர் வாக்களித்தனர். எனினும் அவர், அந்நாட்டு அரசியல் சாசன சட்டத்தின்படி தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கிறார். இந்நிலையில் 2019-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், அதிபர் Morales போட்டியிடத் திட்டமிட்டுள்ளர். இதற்கு ஏற்றவகையில், புதிதாக நாடுதழுவிய அளவில் கருத்துக்கணிப்பு அல்லது அரசியல் சட்டத்தை திருத்துதல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் La Paz-நகரில் மிகப்பெரும் பேரணி நடத்தியுள்ளனர். இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டு, அதிபருக்கு எதிராக கோஷமிட்டுச் சென்றனர். Bolivia-வில், அதிபர் பதவியை வகிக்கும் அந்நாட்டு பூர்வகுடியைச் சேர்ந்த முதலாவது நபர், Evo Morales-தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00